யாழ்ப்பாணத்தில் வர்த்தக ஸ்தாபனம் நஷ்டமடைந்தமையால் உரிமையாளர் உயிர்மாய்ப்பு!
Share
யாழ்ப்பாணத்தில் புகைப்பட நிறுவனம் ஒன்று நஷ்டமடைந்தமையால் அதன் உரிமையாளர் 23-12-2024 திங்கட்கிழமை அன்றையதினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இதன்போது கோண்டாவில் வடக்கு, கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த புலவர் ரமேஷ்குமார் (வயது 43) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் நேற்றையதினம் மரணச் சடங்கு ஒன்றிற்கு சென்றுவிட்டு இரவு 10.30 மணிக்கு வீடு வந்துள்ளார். வீடு வந்தவர் மேல் மாடிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவரது மனைவி இரவு 11 மணியளவில் உணவு கொண்டு சென்றவேளை அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
பின்னர் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.