The Ethnic Press & Media Council of Canada hosted its very successful Annual Get together event on Friday December 20, 2024
Share
President and CEO of the Council Mr.Thomas Saras was the Key Person, behind this great event.
கனடிய பல்லின பத்திரிகையாளர்கள் கழகத்தின் வருடாந்த ஒன்றுகூடலும் விருதுகள் வழங்கும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றன.
The Ethnic Press & Media Council of Canada எனப்படும் மிகப்பெரிய பல்லின பத்திரிகையாளர்களின் அமைப்பான ‘கனடிய பல்லின பத்திரிகையாளர்கள் கழகத்தின்’ வருடாந்த ஒன்றுகூடலும் விருதுகள் வழங்கும் நிகழ்வும் கடந்த வெள்ளிக்கிழமை 20ம் திகதி ரொறன்ரோ மாநகரில் உள்ள மண்டபம் ஒன்றில் சிறப்பாக நடைபெற்றன.
கழகத்தின் தலைவர் Thomas Saras அவர்களும் முக்கிய இயக்குனர் சபை உறுப்பினர்களும் அதற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
இவ்வருடத்தின் விழாவிற்கு கனடாவின் மத்திய மற்றும் மாகாண அரசுகளின் தலைவர்களும் கட்சிகளின் தலைவர்களும் வருகை தந்திருந்தனர்.
தமிழ்ச் சமூகம் சார்ந்த ஊடகத்தின் துறையினர் மற்றும் ஏனைய இனங்கள் சார்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக சேவையாற்றும் அன்பர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு கலந்து சிறப்பித்தனர்.
மேற்படி விழாவில் இவ்வருடத்திற்குரிய ஊடகத்துறையினருக்கான விருதுகளை உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் கழகத்தின் சிரேஸ்ட உப- தலைவர்களில் ஒருவருமான ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களின் சிபார்சின் பேரில் BEHIND ME MEDIA GROUP ஊடக நிறுவனத்தின் அதிபரும் வர்த்தகப் பிரமுகருமான கனேந்திரன் செல்வராஜா மற்றும் ‘ரூபம்’ வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களின் அதிபரும் தேசம் பத்திரிகையின் நிர்வாகியுமான ராம் சங்கர் சிவநாதன் ஆகியோருக்கு வழங்கப்பெற்றன. அவர்களுக்குரிய விருதுகளை ஸ்காபுறோ அஜின்கோர்ட் தொகுதியின் மாகாண பாராளுமன்ற உறுப்பினர் அரிஸ் பாபிகியன் வழங்கினார்.
இங்கு காணப்படும் படங்கள் விழாவில் எடுக்கப்பெற்றவையாகும்.
படங்கள்: கெங்கா- ஜரிஏ ஊடகக் குழுமம்- Arjune-Local Journalism Initiative Reporter.