ஐயா இரா. நல்லகண்ணு நூற்றாண்டு விழாக்குழு
Share
விழாக்குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன்
விடுத்துள்ள வேண்டுகோள்
தியாகத் தலைவர் இரா. நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு விழா 29.12.2024 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெறவிருக்கிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்களும், அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் இவ்விழாவில் பங்கேற்க உள்ளனர். நேர நெருக்கடியின் விளைவாகவும், ஐயா நல்லகண்ணு அவர்களின் உடல்நிலை கருதியும் அவருக்குப் பூ மாலைகள், பொன்னாடைகள் ஆகியவற்றை அணிவிப்பதைத் தவிர்க்குமாறு அனைவரையும் அன்புரிமையுடன் வேண்டிக்கொள்கிறேன்.
விழாவின் தொடக்கத்தில் ஐயா அவர்களை மண்டபத்திற்குள் அழைத்து வரும்போது அங்குக் கூடியிருப்பவர்கள் மலர்களைத் தூவுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பங்கெடுத்துக்கொண்டு மலர்களைத் தூவி ஐயாவை வாழ்த்துமாறு வேண்டிக்கொள்கிறேன்.
அன்புள்ள,
(பழ. நெடுமாறன்)