LOADING

Type to search

இந்திய அரசியல்

பெண்கள் பாதுகாப்பு; விஜய்யின் பேச்சு குறித்து மேயர் பிரியா பதில்

Share

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு த.வெ.க. தலைவர் விஜய், மகளிருக்கு வாழ்த்து தெரிவித்து காணொலி ஒன்றை வெளியிட்டார். அதில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து பேசிய அவர், தி.மு.க அரசு மீது விமர்சனத்தை முன்வைத்தார். இந்நிலையில், விஜய்யின் பேச்சு குறித்து சென்னை மேயர் பிரியாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். புதுமைப் பெண் திட்டம் மூலம் ஏராளமான பெண்கள் கல்வி பயிலும் வாய்ப்பை பெற்றுள்ளனர். இது போன்ற குற்றச்சாட்டுகள் தேவையற்றது” என்று தெரிவித்தார்.