LOADING

Type to search

சினிமா

ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று தொடங்குகிறது

Share

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023 ஆண்டு வெளியான படம் ஜெயிலர். இந்தப் படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் இந்தப் படத்தை தயாரித்திருந்தது. சில மாதங்களுக்கு முன் ஜெயிலர் 2 திரைப்படத்தின் அறிமுக டீசரை படக்குழு வெளியிட்டது. இதனால் திரைப்படத்தை குறித்த எதிர்ப்பார்ப்பு அதிகரித்தது. வீடியோவில் அனிருத் மற்றும் நெல்சன் திலிபிகுமார் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் படப்பிடிப்பு பணிகள் நாளை சென்னையில் தொடங்கவுள்ளது. சென்னையில் 15 நாட்கள் நடைப்பெறும் இந்த ஸ்கெடியூலில் ரஜினிகாந்த் மற்றும் சக நடிகர்கள நடிக்கவுள்ளனர். மற்ற பான் இந்திய நடிகர்கள் யாரெல்லாம் இப்படத்தில் நடிக்கிறார்கள் என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்புடன் இருக்கின்றனர்.