LOADING

Type to search

இந்திய அரசியல்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் – அரசு தலைமை கொறடா அறிவிப்பு

Share

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். நாளை வேளாண்மை பட்ஜெட்டை வேளாண்மைத்துறை அமைச்சர் தாக்கல் செய்வார். இதைத் தொடர்ந்து 17-ந் தேதி முதல் சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். இந்த நிலையில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 14-03-2023 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கில்” நடைபெறும். அதுபோது கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.