LOADING

Type to search

சினிமா

எனக்கு தனுஷையும் பிடிக்கும்.. அவரிடம் கதையும் சொல்லியிருக்கிறேன் – இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து

Share

தமிழ் திரையுலகில் “ஓ மை கடவுளே” திரைப்படம் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இவரின் அடுத்தப் படம் குறித்த எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியது. அதன்படி, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கிய டிராகன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வசூலை வாரிக்குவித்தது. மேலும், இவர் அடுத்ததாக நடிகர் சிலம்பரசன் நடிக்கும் 51-வது திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிலம்பரசனின் ரசிகரான அஷ்வத் தனது மூன்றாவது திரைப்படத்தில் அவரையே இயக்குகிறார். இந்த நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, “நான் நடிகர் சிலம்பரன் ரசிகர் தான். ஆனால் எனக்கு நடிகர் தனுஷையும் பிடிக்கும். மேலும், நான் அவரிடம் கதை ஒன்றையும் கூறியிருக்கிறேன். அது காதல், ஆக்ஷன் மற்றும் திரில்லர் கலந்த கதையை கொண்ட படம் ஆகும்,” என்று தெரிவித்தார்.