LOADING

Type to search

இந்திய அரசியல்

எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் – நிதியமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

Share

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். சுமார் 2 மணிநேரம் 38 நிமிடங்கள் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து தமிழ்நாட்டின் மேம்பட்ட எதிர்க்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது பட்ஜெட் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:

மகளிர் நலன் காக்கும் மாபெரும் திட்டங்கள்

ததும்பி வழியும் தமிழ்ப் பெருமிதம்

இளைஞர்களுக்கு உலகை வெல்லும் உயர்தொழில்நுட்பம்

தமிழ்நாடெங்கும் வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் தொழிற்பூங்காக்கள்

புதிய நகரம்

புதிய விமான நிலையம்

புதிய நீர்த்தேக்கம்

அதிவேக ரயில் சேவை என நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிடும் முன்முயற்சிகள்! விளிம்பு நிலை மக்களை அரவணைக்கும் தாயுமானவரின் கரங்கள் என அனைவருக்குமான திட்டங்கள் பல இன்று அறிவிக்கப்பட்டுள்ளன! ‘எல்லோர்க்கும் எல்லாம்’ எனும் உயரிய நோக்கத்துடன் தமிழ்நாட்டின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது தமிழக பட்ஜெட்2025! நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் நிதித்துறை அதிகாரிகள் அனைவர்க்கும் வாழ்த்துகள்! என பதிவிட்டுள்ளார்.