LOADING

Type to search

உலக அரசியல்

போரை நிறுத்தும் ‘உன்னத பணி’; மோடி உள்ளிட்ட உலக தலைவர்களுக்கு புதின் நன்றி

Share

உக்ரைன்-ரஷியா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு வழங்கி வந்த நிதி மற்றும் ஆயுத உதவிகளை டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு சமீபத்தில் நிறுத்தியது. மேலும் உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். சமீபத்தில் சவுதி அரேபியாவில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், 30 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தம் கொண்டு வரும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதே சமயம், உக்ரைன்-ரஷியா போர் தொடங்கியதில் இருந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கடந்த மாதம் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, “உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலையாக இல்லை. அமைதியின் பக்கம் இந்தியா இருக்கிறது. இது போருக்கான காலம் அல்ல என்று ரஷிய அதிபர் புதினிடம் வலியுறுத்தியுள்ளோம். அதிபர் டிரம்ப்பின் முயற்சிகளை வரவேற்கிறோம்” என்று தெரிவித்தார். இந்த நிலையில், உக்ரைனின் போர்நிறுத்த திட்டம் குறித்து முதல் முறையாக பொதுவெளியில் கருத்து தெரிவித்துள்ள ரஷிய அதிபர் புதின், போரை நிறுத்தும் உன்னத பணிக்காக பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.