LOADING

Type to search

சினிமா

நடிகர் தீக்ஷித் ஷெட்டி தமிழில் அறிமுகம்

Share

சினிமா துறையில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் தீக்ஷித் ஷெட்டி. இவர் நடிப்பில் 2020 ஆம் ஆண்டு வெளியான தயா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இவர் கடைசியாக நடித்து வெளியான பிளிங்க் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஓடிடியில் வெளியான பிறகு பல மொழி மக்கள் இப்படத்தை பார்த்து பாராட்டினர். இந்நிலையில் நடிகர் தீக்ஷித் ஷெட்டி தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஸ்ரீ சரவண பிலிம் ஆர்ட்ச் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு முன் இந்த நிறுவனம்  உமாபதி ராமையா நடிப்பில் வெளியான பித்தல மாத்தி திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் அமித் பார்கவ் மற்றூம் ஆயிஷா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் ஒளிப்பதிவை வெங்கடேஷ்வர் மேற்கொள்கிறார். படத்தின் மற்ற விவரங்களை விரைவில் வெளியிடுவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.