LOADING

Type to search

இலங்கை அரசியல்

வடமராட்சி கடலில் சட்டவிரோத தொழிலாளர்கள் அட்டகாசம் – வேடிக்கை பார்க்கும் கடற்படை!

Share

வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கடலில் 50 மேற்பட்ட படகுகள் ஒளிபாய்ச்சி சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

17-03-2025 அன்று மாலை 5.30 மணியளவில் வெற்றிலைக்கேணி கடற்படை முகாமிற்கு அருகில் இருந்து சென்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட படகுகள் ஒளிவைத்து பல்லாயிரக்கணக்கான மீன்களை பிடித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் குறித்த விடயத்தை கடற்படையினரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

இருப்பினும் கடற்படையினர் அது குறித்து அவர்கள் நடவடிக்கை எடுக்காது, போதைப் பொருளை மட்டும் கைப்பற்றும் நோக்கில் செயற்படுவதாகவும், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை இதுவரை கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடற்படை முகாமிற்கு அருகாமையில் இருந்து சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் தொழிலாளர்கள் கைது செய்யப்படாமை குறித்து அப்பகுதி மீனவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

சமாச தலைவர் தங்கரூபன் – 0770762049

வெற்றிலைக்கேணி கடற்படை அதிகாரி றணசிங்க – 0770261034