LOADING

Type to search

சினிமா

சிம்பு நடிக்கும் “எஸ்டிஆர் 49” படத்தில் மிருணாள் தாகூர்

Share

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் தற்போது இயக்குனர் மணி ரத்னம் இயக்கியுள்ள “தக் லைப்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் 3 புதிய திரைப்படங்களின் அறிவிப்புகள் வெளியாகின. அந்த வகையில், அடுத்ததாக சிம்பு ‘பார்க்கிங்’ திரைப்பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ‘எஸ்டிஆர் – 49’ படத்திலும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்டிஆர் – 50’ திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். ‘ஓ மை கடவுளே, டிராகன்’ படங்களை இயக்கியுள்ள இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘எஸ்டிஆர் – 51’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் ‘எஸ்டிஆர் – 49’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ‘சீதாராமம்’பட நடிகை மிர்ணாள் தாகூர் நடிக்கப் போகிறார் என புதிய தகவல் வெளிவந்துள்ளது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவுடன் இணைந்து சாய் பல்லவி, சந்தானம் ஆகியோர் நடிக்கப் போகிறார்கள் என தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பை துபாயில் நடத்த படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானது.