Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணத்தில் ஆசிரியரை தாக்கிய நிதி நிறுவன முகாமையாளரின் தாயாரும் சகோதரிகளும் கைது!

Share

பு.கஜிந்தன்

தனியார் நிதி நிறுவனத்தின் முகாமையாளர் ஒருவர் அயல் வீட்டில் உள்ள ஆசிரியரை மண்வெட்டியால் தாக்கிய நிலையில் பாதிக்கப்பட்ட நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்ச சம்பவமானது கடந்த 22.03.2025 அன்று அச்சுவேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக தாக்குதலை மேற்கொண்ட முகாமையாளருக்கு துணைபோன தாயார் மற்றும் இரண்டு சகோதரிகள் இன்றையதினம் அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இருப்பினும் தாக்குதலை நடாத்தியவர் ஆஜராகவில்லை.