LOADING

Type to search

இலங்கை அரசியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் கைது செய்யப்பட்டதை வெடி கொழுத்தி கொண்டாடிய இளைஞர்கள்– மட்டக்களப்பு நகரில் அரங்கேறிய ஆரவாரம்

Share

(கனகராசா சரவணன்)

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணக்குழு கைது செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்ததையடுத்து ஒன்றினைந்த சில இளைஞர்கள் மட்டக்களப்பு நகர் மணிக்கூட்டு கோபுரத்து வீதி சுற்றுவட்டத்தில் 25ம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 9.00 மணியளவில் வெடி கொழுத்தி கொண்டாடினர்.

முன்னாள் அமைச்சர் கைது விவகாரத்தையடுத்து மாவட்டத்தில் மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறிய நிலையில் சம்பவதினமான செவ்வாய் இரவு சுமார் 09.00 மணியளவில் மட்டக்களப்பு நகர் மணிக்கூட்டு கோபுரத்து வீதி சுற்றுவட்டத்தில் ஒன்றினைந்து வெடிகளை கொளுத்தி சந்தோசத்தை வெளிப்படுத்தியதையடுத்து அந்த பகுதி வெடி சத்தத்தினால் அதிர்ந்ததையடுத்து மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.