LOADING

Type to search

உலக அரசியல்

இறக்குமதி வாகனங்களுக்கு 25% வரி: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு

Share

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு கார்கள் மற்றும் அதன் உதிரிபாகங்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த புதிய உத்தரவு ஏப்ரல் 3, முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப் இது தொடர்பாக கூறுகையில் “அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படாத எல்லா கார்களுக்கும் இந்த 25% வரி பொருந்தும்” என்று கூறினார். டிரம்பின் இந்த முடிவு அமெரிக்க உள்நாட்டு வாகனத் தொழிலை மேம்படுத்துவதற்காகவும், உள்ளூர் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்காகவும் எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது. டிரம்பின் இந்த உத்தரவால், கனடா, மெக்ஸிகோ, ஜப்பான், தென் கொரியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதியாகும் கார்கள் இந்த வரி உயர்வால் நேரடியாக பாதிக்கப்படும். இதனால், அந்த நிறுவன கார்களின் விலை உயரக்கூடும்.