LOADING

Type to search

இந்திய அரசியல்

தண்ணீர் பந்தல் அமைக்க விஜய் மீண்டும் உத்தரவு

Share

தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் த.வெ.க. நிர்வாகிகளுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும் என கட்சி தலைவர் விஜய் உத்தரவிட்டு இருந்தார். அவரது உத்தரவுக்கிணங்க தமிழகம் முழுவதும் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. எனினும் பல இடங்களில் தண்ணீர் பந்தல் இல்லாமல் இருக்கிறது. அப்படிப்பட்ட இடங்களை நிர்வாகிகள் ஆய்வு செய்து 234 தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் முக்கிய சாலைகள் மட்டுமின்றி வீதி வீதியாகவும் தண்ணீர் பந்தல் கட்சி சார்பில் அமைக்க வேண்டும். தண்ணீர் பந்தல் அமைப்பது மட்டுமின்றி தினமும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் இருப்பதை நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தொண்டர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருக்கிறார்.