ஜப்பானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு
Share

ஜப்பான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் யுஷு தீவில் மாலை 7.34 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. 14 லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட அப்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. மேலும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.