யாழில் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்ட அரச உத்தியோகத்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!
Share

யாழ்ப்பாணத்தில் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்ட, கிளிநொச்சி நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இதன்போது அரசடி வீதி, இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த கிட்ணசாமி கிருபைராஜா (வயது 35) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்துள்ளார். நோயின் வீரியத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் 3ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.