LOADING

Type to search

மரண அறிவித்தல்

‘மகான்’ என்னும் அறவிருட்சம் மறைந்து ஓடிச் சென்ற ஓராண்டு! | அமரர். நாகமணி மகேந்திரன்

Share

(முன்னாள் உத்தியோகத்தர் தலவாக்கலை பாமஸ்டன் குரூப் மற்றும் பிரதம எழுதுவினைஞர். இறக்குவானை ஸ்பிரிங்வூட் பெருந்தோட்டம்)

நாகமணி – செல்லம்மா இணையரின் இல்லறத்தில் முதல்வனாய் நானெனவே மலையகத்தில் வந்துதித்த மாசற்ற மகான் ஏகினார் எமைப் பிரிந்து வானுலகில் வாசம் செய்பவராய் எமக்கானவர் என்றும் எம்முடனே உறைவார் எனிறிருக்க எண்பதாம் அகவையில் அவரைக் கவர்ந்தான் கயவன் இயமன் அன்றுவரை அன்பான மனைவி அரிய இரு பிள்ளைகள் பின்னாளில் வந்திணைந்த மருமக்கள் உடன் பிறந்தவர் இன்னும் பிரியமுள்ள பேரக்குழந்தைகளோடும் இதயத்தால் வாழ்ந்தார்!

உள்ளத்தைப் போன்று உடலழகும் மிக்கவராய் அழகராய் ஊரறிந்த பெருமகனாய் பெருமை கொள்ளா திருமகனாய் கள்ளமில்லா மனதோடும் கனிவு படர் முகத்தோடும் கால்பதித்த ஊரெல்லாம் சிலிர்த்தபடி சிந்தித்து வாழ்ந்தவரே அள்ளி அள்ளித் தெளித்த பேரிடர்கள் பல வாட்டியும அருகிருந்த அன்புடையாள் அவதியாய் மறைந்திடினும் துள்ளித் திரிந்த பிள்ளைகள் இருவரையும் கண்கள்போல் தேற்றி வளர்த்து மருமக்கள் வசம் ஒப்படைத்த மகான் நீங்கள்!

இங்ஙனம்,

தங்களை இழந்து தவிக்கும் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள். சகோதரி, மைத்துனிகள் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள்

தகவல்:

ம. பிரதீபன் (மகன்-இலங்கை): 0742199585, 0776203599
கி. சஞ்சுதா (மகள்-இலங்கை): 0711642231, 0779157007
நா. லோகேந்திரலிங்கம் (சகோதரர்-கனடா): (416) 732-1608