LOADING

Type to search

இந்திய அரசியல்

தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ. 522 கோடி விடுவிப்பு – மத்திய அரசு ஒப்புதல்

Share

2024ம் ஆண்டு கனமழை, வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கனமழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு, பாண்டிச்சேரி, இமாச்சலபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களுக்கு ரூ. 1,280.35 கோடி பேரிடர் நிவாரண நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, பீகாருக்கு ரூ. 588.73 கோடி, தமிழ்நாட்டிற்கு ரூ.522.34 கோடி, இமாச்சலபிரதேசத்திற்கு ரூ. 136.22 கோடி, பாண்டிச்சேரிக்கு ரூ.33.06 கோடி ரூபாய் நிதி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 2024-25 நிதியாண்டில் இதுவரை மாநில பேரிடர் நிவாரண நிதியாக 28 மாநிலங்களுக்கு மொத்தம் 20,264.40 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.