LOADING

Type to search

சினிமா

“வீர தீர சூரன்” படம் வெற்றி… ரசிகர்களுக்கு நன்றி கூறிய விக்ரம்

Share

சித்தா பட இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘வீர தீர சூரன் 2’. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷாரா விஜயன், சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் விக்ரம் கிராமிய தோற்றத்தில் ‘காளி’ என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ‘வீர தீர சூரன் 2’ படம் பல தடைகளை தாண்டி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் “ஒரேயொரு வாழ்க்கை வரலாறாக வாழ்ந்து… அப்படி என ஒருவன் எளிமையாக சொல்லிவிட்டு சென்றுவிட்டான். ஆனால், இந்த வாழ்க்கை இருக்கிறதே எதாவது ஒரு பிரச்னையை தூக்கி வீசுகிறது. உதாரணமாக ‘வீர தீர சூரன்’ படம் ரிலீஸுக்கு முன்பாக பயங்கரமாக பாராட்டி அனைவரையும் ஆர்வத்தில் ஆழ்த்தினார். அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான், சட்டப் பிரச்னை. உயர் நீதிமன்றம் இதை 4 வாரங்களுக்கு தடை எனக் கூறியது. நானும் எனது இயக்குநரும் இதில் நடித்த அனைவரும் மிகவும் கடினமாக உழைத்து இருக்கிறோம். ரசிகர்களிடம் எப்படியாவது இதைக் கொண்டு சேர்க்க வேண்டுமென நினைத்தோம். என்னால் செய்ய முடிந்ததைச் செய்தேன்..பேராதரவுக்கு நன்றிஎனது ரசிகர்களுக்காக மிகவும் எதார்த்தமான, வித்தியாசமான கமர்ஷியல் படத்தை தர நினைத்துதான் இந்தப் படத்தில் நடித்தேன்.முதலிரண்டு காட்சிகள் இல்லாமல் வெளியானால் அந்தப் படம் அவ்வளவுதான் என்பது வழக்கமானது. ஆனால், படம் வெளியான பிறகு மக்களிடம் நல்ல ஆதரவு கிடைத்தது. குறிப்பாக குடும்பத்திடம் இருந்து பேராதரவு கிடைத்தது. உங்கள் அனைவருக்கும் நன்றி கூற வேண்டும்.படம் பெரிய வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என உறுதியாக கூறுகிறேன். நாங்கள் நினைத்தது நடந்தது. படம் பார்த்தவர்கள் மகிழ்ந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். பார்க்காதவர்கள் பார்ப்பீர்கள் என நம்புகிறேன்” என்றார்.