LOADING

Type to search

சினிமா

‘குட் பேட் அக்லி’ படம் முதல் நாளில் ரூ.30 கோடி வசூல்

Share

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள படம் ‘குட் பேட் அக்லி’. இப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘குட் பேட் அக்லி’ படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம் அலைமோதியது. படம் வெளியாவதையொட்டி  திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி உள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ‘குட் பேட் அக்லி’ முதல் நாளில் ரூ.30 கோடி ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.