விமல் நடித்த `கரம் மசாலா’ படத்தின் முதல்காட்சி வெளியீடு
Share

நடிகர் விமல் அடுத்ததாக அப்துல் மஜித் இயக்கத்தில் `கரம் மசாலா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டது. இப்படம் ஒரு குடும்ப பொழுதுபோக்கான காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது. மேலும் படத்தில் சம்பிகா, ராஜேந்திரன், எம்.எஸ் பாஸ்கர், ஜான் விஜய், ஸ்ரீனிவாசன், ரவி மரியா, சாம்ஸ் ,நமோ நாராயணன் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவை கே கோகுல் மேற்கொள்ள. பைஜு ஜேகம் படத்திற்கு இசையமைத்துள்ளார். கரம் மசாலா படத்தை அப்துல் மஜித் தயாரித்துள்ளார். திரைப்படம் வரும் கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கிறது என படக்குழு அறிவித்துள்ளது. விமல் சமீபத்தில் நடித்து வெளியான ஓம் காளி ஜெய் காளி வெப் தொடர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.