LOADING

Type to search

உலக அரசியல்

டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து எலான் மஸ்க் விலகல்

Share

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அரசு நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக ‘டாட்ஜ்’ என்னும் புதிய துறை உருவாக்கப்பட்டது. அதன் செயல் தலைவராக உலக பணக்காரர்களில் ஒருவரும் ‘டெஸ்லா’ நிறுவன அதிபருமான எலான் மஸ்க் பொறுப்பு வகித்து வந்தார். தொடர்ந்து நிர்வாகத்தில் மாற்றங்கள் கொண்டு வரும் விதமாக பல அதிரடி முடிவுகளை மேற்கொண்டார். அரசு ஊழியர்கள் பணியைவிட்டு நீக்குதல், அரசு செலவுகளை குறைத்தல் உள்ளிட்டவற்றில் மஸ்க் தலைமையிலான ‘டாட்ஜ்’ துறை தீவிரமாக ஈடுபட்டது. இதனால் அரசுக்கு ஒருநாள் செலவில் இருந்து ரூ.34 ஆயிரம் கோடி வரை குறைக்கப்பட்டது. இந்தநிலையில் டிரம்புடன் இணைந்து கொண்டு எலான் மஸ்க் செயல்படுவதால் அவருடைய டெஸ்லா நிறுவனம் உள்ளிட்டவற்றின் பங்குகள் மதிப்பு குறைய தொடங்கின. நேற்று ஒரேநாளில் 20 சதவீதம்வரை டெஸ்லாவின் லாபம் குறைந்தது. இந்தநிலையில் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் டாட்ஜ் துறைக்கு நேரம் ஒதுக்குவதை குறைத்து கொள்ள இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதனால் டெஸ்லா வளர்ச்சிக்கு பங்காற்ற முடியும் என்றார். அடுத்த மாதத்துக்குள் (மே) டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து முழுவதுமாக வெளியேறிவிடுவேன் எனவும் சூசகமாக தெரிவித்துள்ளார்