LOADING

Type to search

கனடா அரசியல்

கடந்த 15 வருடங்களாக கலை சார்ந்த பணிகளை ஆற்றிவரும் ‘கிழக்கு ஒளி இணையம்’ நடத்திய ‘சித்திரை நிலா’ பல்சுவைக் கலை விழா.

Share

கனடாவில் கடந்த 15 வருடங்களாக இயங்கி கலை சார்ந்த பணிகளை ஆற்றிவரும் ‘கிழக்கு ஒளி இணையம்’ ஏற்பாட்டில் நடைபெற்ற ‘சித்திரை நிலா’ பல்சுவைக் கலை விழா கடந்த 19-04-2025 அன்று சனிக்கிழமை மாலை நோர்த் யோர்க் நகரில் உள்ள காடினல் மக்கிகான் கத்தோலிக்க பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

கலைஞரும் கவிஞருமான மதிபாஸ்கரன் அவர்களைத் தலைவராகக் கொண்டு இயங்கிவரும் இந்த ‘கிழக்கு ஒளி இணையம்’ பல அங்கத்தவர்களைக் கொண்டு சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அன்றைய விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக ‘இலங்கை வேந்தன்’ என்னும் பெயரில் இராவணனின் கதை சொல்லும் நாட்டுக் கூத்தும் இடம்பெற்று அனைவரதும் பாராட்டுக்களைப் பெற்றது.

அத்துடன் உள்ளுர்க் கலைஞர்களின் நடனங்கள் மற்றும் பாடல் நிகழ்வுகள் அனைத்தும் சிறப்பாக இடம்பெற்றன.

இங்கே காணப்படுகின்ற படங்கள் அங்கு எடுக்கப்பெற்றவையாகும்

செய்தியும் படங்களும் : சத்தியன்