LOADING

Type to search

சினிமா

தனுஷின் `இட்லி கடை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Share

நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘பவர் பாண்டி’, ‘ராயன்’ போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்து இவரது இயக்கத்தில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் அண்மையில் வெளியானது. இதனை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக ‘இட்லி கடை’ என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது. இது தனுஷின் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. எம்மாதிரியான கதைக்களத்துடன் இப்படம் இருக்கும் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதனிடையே இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.ஆனால் திரைப்படத்தின் சில காட்சிகள் இன்னும் எடுக்கப்படாதலால் திரைப்படம் அந்த தேதியில் வெளியாகாது என படக்குழு சமீபத்தில் தெரிவித்தது. திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பேங்காக்கில் கடந்த வாரம் நடைப்பெற்று வந்தது. இந்நிலையில் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக அருண் விஜய் அவரது சமூக வலையத்தில் பகிர்ந்துள்ளார்.