LOADING

Type to search

அரசியல்

இந்திய தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில், கொவிட் விதிமுறைகள் மீறல்

Share

தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில், கொவிட் விதிமுறைகள் மீறப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, இந்திய மல்யுத்த கூட்டமைப்பிடம் இந்திய விளையாட்டு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. டில்லி நொய்டா விளையாட்டு அரங்கில், கடந்த ஜனவரி 23ம் தேதி நடந்த தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், கொவிட் தொடர்பான நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என ஊடகங்களில் செய்தி வெளியானது.

இது குறித்து இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமை இயக்குனர் சந்தீப் பிரதான் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்த விவகாரத்தை தேசிய மல்யுத்த கூட்டமைப்பிடம் எடுத்துச் சென்றுள்ளோம். கொவிட் தொடர்பான நெறிமுறைகள் கடுமையாக பின்பற்ற வேண்டும் என நாங்கள் வலியுறுத்தினோம். இது குறித்து திங்கள் கிழமைக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படியும் கூட்டமைப்பிடம் நாங்கள் கேட்டுள்ளோம். கொவிட் நெறிமுறைகளை பின்பற்றுவதாக கூட்டமைப்பு உறுதி அளித்துள்ளது. விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, கொவிட் நெறிமுறைகளை தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள், கடுமையாக பின்பற்ற அறிவுறுத்தும்படி  இந்திய ஒலிம்பிக் சங்கத்தை, இந்திய விளையாட்டு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறு சந்தீப் பிரதான் தெரிவித்தார்.