ஒட்டாவா நாடாளுமன்றம் நோக்கிய வாகனப் பேரணி இன்று கனடாவில் நடைபெறுகின்றது
Share
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் இணைத்தலைமை நாடுகளில் ஒன்றாக கனடா இருப்பதனால் தமிழ் மக்கள் சார்ந்து குரல் கொடுப்பதற்கான தார்மீகக் கடமை கனடாவிற்கு இருக்கிறது என்பதைக் தமிழ் மக்களாகிய நாம் உரத்த குரலில வலியுறுத்த வேண்டிய காலம் கனிந்துள்ளது.
இது தொடர்பில் கடந்த ஐனவரி 27 அன்று வெளிவந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் பரிந்துரைகளை இணைத்தலைமை நாடுகள் ஊடாகத் தீர்மானம் ஒன்றில் வரைவாக கொண்டுவருமாறு கனேடிய அரசை வலியுறுத்தி நிற்க வேண்டிய கடப்பாடும் கனேடியத் தமிழர் சமூகத்தினராகிய எமக்கு உண்டு.
அந்தவகையில், புதிய தீர்மானம் ஒன்றில் கீழ்வருவன இணைக்கப்படுவதற்கு, இணைத்தலைமை நாடுகளைக் கனடா தலைமை தாங்க வேண்டும் என்று கோரி கனடிய பிரதமருக்கும் வெளிவிவகார அமைச்சருக்கும் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் பிரதியை கீழே இணைத்துள்ளோம்.
இது தொடர்பில் இன்று புதன்கிழமை 02-17-2021 காலை 8 மணிக்கு மார்க்கம் ஸ்டீல்ஸ் சந்திப்பிலிருந்து ஒட்டாவா பாராளுமன்றம் நோக்கிய வாகனப் பேரணி ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது
- யுத்தக் குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராகப் புரியப்பட்டுள்ள இனப்படுகொலை ஆகியவற்றிற்காக ஸ்ரீ லங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துதல்.
- யுத்தக் குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராகப் புரியப்பட்டுள்ள இனப்படுகொலை ஆகியவற்றிற்காக ஸ்ரீ லங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துதல்.
- போர்குற்றம் இழைத்துள்ள ஸ்ரீ லங்கா அதிகாரிகள் மீது பயணத் தடை விதித்தல்.
- போர்குற்றம் இழைத்துள்ள ஸ்ரீ லங்கா அதிகாரிகளின் சொத்துக்களை முடக்குதல்.
- சர்வதேச அட்டூழியக் குற்றங்கள் மீள நடைபெறாமைக்கு உத்தரவாதம் அளித்தல்.
தொடர்புகளுக்கு:
மகாஜெயம் – 647-262-5587
மரியராசா – 416-669-6437
றெஜி – (மொன்றியல்) – 514-651-1419