LOADING

Type to search

அரசியல்

இரட்ணம் பவுண்டேசன் இலவச கணினி வகுப்பறை கட்டிட திறப்பு விழா நிகழ்வு

Share

ஒலுமடு நெடுங்கேணி வவுனியா எனும் முகவரியில் உள்ள கிராமத்தில் இரட்ணம் பவுண்டேசன் நிறுவனத்தினால் சிவனருள் இலவச கல்வி நிலையத்தின் ஒரு பகுதியான இலவச கணினி வகுப்பு நடைபெற்று வருகின்றது. அதற்கான நிரந்தரமான வகுப்பறை கட்டிடம் 20.03.2021 அன்று மாலை 2.30 மணியளவில் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வு கணினி வகுப்பு தலைமை ஆசிரியர் திரு வி.சுவேந்தன் தலைமையில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வவுனியா வடக்கு வலய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப ஆசிரிய ஆலோசகர் திரு ச.சிவராசா (ISA)  கலந்து கொண்டார். மற்றும் சிவனருள் நிறுவன பணியாளர் து.சந்திரனும் ஆசிரியர் த.செந்தீபனும் கல்வி நிலையத்தின் நிர்வாகி திரு கு.லோகிதாசன் அவர்களும் கலந்துகொண்டனர்.

விருந்தினர்களை மாணவர்கள் வரவேற்புடன் ஆரம்பமாகி மங்கள விளக்கினை திரு ச.சிவராசா ஏற்றிவைக்க இரட்ணம் பவண்டேசன் இலவச கணினி வகுப்பு அறை கட்டிட பெயர் பலகையினை சிவனருள் நிறுவன பணியாளர் திரு த.செந்தீபன் அவர்கள் திரைநீக்கம் செய்து வைக்க பிரதான கணினி வகுப்பறை கட்டிடத்தை திரு ச.சிவராசா (ISA)  நாடா வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து மாணவர்கள் கணினி வகுப்பு செயற்பாடுகளை ஆரம்பித்தனர். ஆதை தொடர்ந்து பிரதமவிருந்தினர் தனது உரையில் கணினியே எதிர்காலதில் சகல கல்விச் செயற்பாடுகளுக்கும் பிரதான காரணியாக மாறும் காலம் உருவாகி வருவதால் கணினி கற்கை நெறி மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது என்பதை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினார். பின்பு நிகழ்வுகள் யாவும் 4.00 மணிக்கு நிறைவடைந்தது. மேற்படி நிகழ்வில் கல்விநிலைய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

நன்றி

து.சந்திரன்
இவ்வண்ணம்