என் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்திப் பாருங்கள் – சீமான் சவால்
Share
கடந்த 50 ஆண்டுகாலமாக திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தார்கள் சென்னை முழுவதுமே சாலையில் கழிவு நீர் பிரச்சனை குடிநீர் வசதி இல்லை தலைநகரை இப்படி என்றால் திருவற்றியூர் மட்டும் என்ன விதிவிலக்கா ஆட்சி செய்தவர்கள் குடிமனை பட்டா கூட வழங்கவில்லை அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
திருவொற்றியூர் தொகுதி முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது அனைவரும் கேட்பது வேலைதான். நான் வேறு தொகுதியில் அமெரிக்காவிலிருந்து வந்து திருவொற்றியூரில் போட்டியிடவில்லை. என் நாடு என் உரிமை நான் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடுவேன். ஜெயலலிதா, கருணாநிதியை ஏன் கேட்கவில்லை. இது ஒரு பிரச்சினையே கிடையாது. திருவெற்றியூர் தொகுதியில் போட்டியிட இங்கிருக்கும் பிரச்சினைகள் தான் காரணம்.
தொகுதி பிரச்சினை குறித்து பிரச்சாரங்களில் பேசமாட்டேன். காரணம் 50 ஆண்டு காலமாக திராவிட கட்சிகள் பேசிக்கொண்டு தான் இருக்கின்றனர். நான் வந்தால் பிரச்சினையை தீர்த்து செயலில் ஈடுபடும் என தெரிவித்தார்.
தன்னாட்சி அதிகாரம் பெற்ற வருமான வரித் துறை, அமலாக்கத் துறை உள்ளிட்ட இந்த அமைப்புகளை பிரதமர் மோடி ஐந்து வருடங்களாக பயன்படுத்தி வருகிறார். அதை வைத்து மிரட்டி வருகிறார். அச்சுறுத்த கடைசி ஆயுதமாக வருமான வரித்துறை சோதனை பயன்படுத்துகின்றனர். ஏன் என் வீட்டில் ஒரு முறையாவது வருமானவரித்துறை சோதனை நடத்திப் பாருங்கள் பார்ப்போம் என சவால் விடுத்தார்.
நகை மற்றும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்கின்றனர். ஏன் ஓராண்டுக்கு முன்பே தள்ளுபடி செய்திருக்கலாம். அப்போதும் ஐயா எடப்பாடி தான் ஆட்சியில் இருந்தார். வெற்று அறிவிப்புகள் ஆக இலவசங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் கருத்து கணிப்புகள் திரளாக மாறியுள்ளன மக்களை குழப்புகிறது வியாபாரமாகி விட்டது அதை தடை செய்ய வேண்டும் என்றார் சீமான்.