மலையக மக்கள் முன்னணியை ‘சதி’ செய்து கைப்பற்றிக் கொண்ட முன்னாள் அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன்
Share
யாழ்ப்பாணத்திலிருந்து விசாகன் எழுதுகின்றார்
மலையக மக்கள் முன்னணியின் என்னும் பெயரில் நீண்ட காலமாக இலங்கை மலையக மக்களின் தொழிற்ங்கமாக விளங்கிய வண்ணம், அந்த தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்த அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் அமரர் சந்திரசேகரன்; அவர்களே ஆவார். அன்னார் தோட்டத் தொழிலாளர்களின் நலன்களுக்காக அயராது உழைத்த ஒருவர். அத்துடன் விடுதலைப் புலிகள் இயக்கம் வன்னியில் கோலோச்சி நின்ற காலத்தில் வன்னிக்குச் சென்று விடுதலைப் புலிகள்; இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களையும் அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களையும் சந்தித்து அவர்கள் இருவருக்கும் ஆதரவுக் கரத்தை நீட்டியவராவார்.
இவ்வாறான ஒரு மலையகத் தொழிற்சங்கத் தலைவரால் ஆரம்பிக்கப்பட்ட மேற்படி மலையக இயக்கம், திரு சந்திரசேகரனின் மறைவிற்குப் பின்னர் அவரது துணைவியாரை தற்காலிகத் தலைவராகக் கொண்டு இயங்கத் தொடங்கியது. அப்போது திருமதி சந்திசேகரன் அவர்கள் கொழும்பிற்கு வந்;து அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சா போன்றவர்களை சந்தித்து பின்னர் தமது தொழிற்சங்கத்தை தானே தொடர்ந்து வழி நடத்தவுள்ளதாகக் கூறிச் சென்றார்.
அதனைத் தொடர்ந்து மறைந்த தலைவர் சந்திரசேகரன் அவர்களது புதல்வியும் சட்டத்தரணியுமான அனுசா சந்திரசேகரனை மலையக மக்கள் முன்னணியின் தலைவரராகக் கொண்டு வர அவரது தாயார் திருமதி சந்திரசேகரன் முயற்சி எடுத்தார்.
ஆனால் தற்போது மலையக மக்கள் முன்னணியை சதி செய்து கைப்பற்றிக் கொண்டு அதன் தலைவராக விளங்கும் முன்னாள் அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன், அந்த அன்னையையும் புதல்வியையும் கட்சியிலிருந்து விலக்கும் வண்ணம் ஏனை சிரேஸ்ட உறுப்பினர்களான லோறன்ஸ் போன்றவர்களின் உதவியோடு செயற்பட்டு திருமதி சந்திரசேகரனையும் அவரது புதல்வி அனுசாவையும் கட்சியிலிருந்து வெளியேற்றி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
அண்மையில் நுவரெலியாவில் நடைபெற்ற மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாட்டை நடத்தி அதன் மூலம் தனது பலத்தை நிரூபிக்கவும் வீ இராதாகிருஸ்ணன் எண்ணினார். அதற்காக தமிழ்த் தேசிய கூட்டமம்பபின் கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினரும், தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வருபவருமான சாணக்கியனையும் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதியான ஹரின் பெர்னாண்டோவையும் சிறப்புப் பேச்சாளர்களாக அழைத்திருந்தார்.
ஆனால் மேற்படி இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்ளாத சாணக்கியன் மீது கோபம் கொண்ட நிலையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது சாணக்கியன் அழைப்பை எடுக்கவில்லை என்றும் அவர் தனக்கும் தனது கட்சிக்கும் ‘சதி’ செய்துவிட்டார் என்று கூறிவருகின்றாராம்
இது இவ்வாறிருக்க, நுவரெலியாவில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சாணக்கியனை இந்த இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்வதற்கான ஏற்பாட்டினை செய்தவர் சுமந்திரன் என்றபடியால் அவருக்கு தொலைபேசியில் அழைத்து “சாணக்கியன் என்னையும் எமது மலையக மக்களையும் ஏமாற்றி விட்டார்” என்று குற்றஞ்சாட்டினாராம்.
இந்த நிலையில் ஹரின் பெர்னாண்டோ மாநாட்டின் முதல் நாள் மாலை தனது மெய் பாதுகாவலர் மூலமாக, தனக்கு அடுத்த நாள் வழக்கறிஞர்களை சந்திக்க வேண்டிய கூட்டமொன்று இருப்பதாகவும் அதனால் மாநாட்டில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை இருப்பதாகவும் அறிவித்தார் என்றும் வீ. இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்
ஆனால் முன்னாள் அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன் கொழும்பில் தன்னைச் சார்ந்தவர்களிடம் பேசும் போது “நாங்கள் எம்பி சாணக்கியனின் வரவை ஆவலோடு எதிர்ப்பார்த்திருந்தோம். 17ஆம் திகதி கூட்டத்திற்கு வருவதற்கான இடத்தையெல்லாம் அவர் கேட்டிருந்தார். காலையில் கூட்டம் சேர்ந்திருக்கவில்லை என்பதால் 10.30 மணிக்கு வந்தால் போதுமானது என நாம் அவருக்கு அறிவித்திருந்தோம். ஆனால், கூட்டம் ஆரம்பித்த பின்னர் கூட அவர் கூட்டத்திற்கு வரவில்லை. அவரோடு தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது தொலைபேசி அழைப்பு எடுக்கப்படவில்லை. அவர் எனக்கும் எமது மக்களுக்கும் ‘சதி’ செய்துவிட்டார் என்று குற்றஞ்சாட்டினாராம்.
முன்னாள் அமைச்சரான வீ. இராதாகிருஸ்ணனின் இந்த செயற்பாடுகள் மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன என்று சில மலையகப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளார்கள்.
வீ. இராதாகிருஸ்ணன் பற்றி அவர்கள் கருத்துக் கூறும் போது அவர் முன்னர் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்தபோது, பல துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டார் என்றும், யார் அழைத்தாலும் சென்னை இந்தியா என்று கிளம்பி விடுவார் என்றும். தனது அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தி தன்னையும் தன்னோடு சேர்ந்திருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்பவர் என்றும் நீதி கேட்டு வருவோரை சந்திக்க மறுத்து தனது சுய இலாப நோக்க அரசியலையே செய்து வந்தவர் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
“மலையக மக்கள் முன்னணிக்கும் அதன் முன்னாள் தலைவரின் துணைவியாருக்கும் மகள் அனுசா சந்திரசேகரன் அவர்களுக்கும் ‘சதி’ செய்து கட்சியை அபகரித்துக் கொண்ட வீ. இராதாகிருஸ்ணன் தான் அழைத்த கூட்டத்தில் கலந்து கொள்ளாத சாணக்கியன் எம்.பி தனக்கு ‘சதி’ செய்து விட்டதாக எவ்வாறு கூறுவார்” என்ற விமர்சனங்கள் தற்போது கொழும்பிலும் மலையகத்திலும் முன்வைக்கப்படுவதாகவும் எமக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.