LOADING

Type to search

விழாக்கள்

நூலாசிரியர்: சபா. அருள்சுப்பிரமணியத்தின் ‘பாடி ஆடு பாப்பா’ நூல் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது

Share

கடந்த 6ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மேற்படி நூல் வெளியீட்டு விழா இணையவழியில் சிறப்பாக நடைபெற்றாலும். திரு. திருமதிசண்முகராசா  அவர்களும், வாசுகிநகுலராசா அவர்களும் மங்கலவிளக்கை ஏற்றிநிகழ்வைத் தொடக்கிவைத்தனர்.

சரலயசங்கீதக் கல்லூரி ஆசிரியர் ஜெயகாந்தி திருஞானசம்பபந்தன் அவர்களின் தமிழ்மொழி வாழ்த்து, கனடாப்பண் என்பவற்றைத் தொடர்ந்து அகவணக்கமும் தலைவர் அறிமுகமும் இடம்பெற்றன.

தலைமை வகித்த சின்னத்தம்பி சண்முகராசா அவர்கள் நூலாசிரியர் திரு. அருள் சுப்பிரமணியத்தால் முதலில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். தலைவர் தமது உரையில் நூல் அமெரிக்க பல்கலைக் கழகத்தின் சிறந்தநூலுக்கான விருதையும் இந்திய “கவிதை உறவு ” மனிதநேய இலக்கிய இதழின் சிறுவர் இலக்கியத்திற்கான பரிசையும் பெற்ற நூலை வெளியிட்டு வைப்பதில் மகிழ்வுகொள்வதாகக் குறிப்பிட்டார்.

வாழ்த்துரைகளை பண்டிதர் திரு. ச.வே.பஞ்சாட்சரம்,ஓய்வுநிலைக் கல்வி அதிகாரி வி.சிற்றம்பலம கனடா  ‘உதயன்’ பிரதம ஆசிரியர் ஆர்.என்.லோகேந்திரலிங்கம் மற்றும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தாமோ.பிரமேந்திரன், தமிழ்ச்சங்க அதிபர் சு. இராசரத்தினம் அவர்களும், சென்னை மணிமேகலை பிரசுர அதிபர் ரவி. தமிழ்வாணன் அவர்களும், பிரான்சைச் சேர்ந்த இலங்கைவேந்தன் அவர்களும் வழங்கினர்.

தமிழ்ப் பூங்கா மாணவர்கள் சிறுவர் பாடல் நூலில் உள்ளபாடல்களைப் பாடி அவை சிறுவருக்கு எவ்வாறு அமைந்துள்ளன என்பதை நிறுவினர்.

ஆய்வுரைகளை பேராசிரியர் ஆ.ரா. சிவகுமாரன் சிங்கப்பூரிலிருந்தும், கனடாவிலிருந்து வாசுகிநகுலராசா அவர்களும், இந்தியாவிலிருந்து வெற்றிச்செழியன்; அவர்களும், கனடாவிலிருந்து எழிலரசுசுப்பிரமணியன், கௌசல்யா சுப்பிரமணியன் அவர்களும், இலங்கையிலிருந்து தனுசாந்தினி பாலசுந்தரம் அவர்களும் வழங்கினர் நூலறிமுகமும் நூல் வெளியீடும் பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களால் வழங்கப் பட்டன.

நூலின் முதற் பிரதியை சின்னத்தம்பி சண்முகராசா அவர்கள் பெற்றுக்கொள்ள, சிறப்புப் பிரதியை வாசுகிநகுலராசா அவர்கள் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து சிறப்புப் பிரதிகளை அசோக், அருண், பாபுஜி, தர்சிஎன்போர் பெற்றுக் கொண்டனர்.

இலக்கணவினாவிடை நூலை அகணிசுரேஸ் அறிமுகம் செய்துவைக்க அதன் ஆய்வுரையை பேராசிரியர் செல்வம் சுpறிதாஸ் வழங்கிச் சிறப்பித்தார். இறுதியில் நூலாசிரியர் சபா. அருள் சுப்பிரமணியம் ஏற்புரையையும் நன்றி உரையையும் வழங்கினார். இத்துடன் நிகழ்வுகள் இனிதேன்நிறைவேறின.

நிகழ்ச்சிபற்றி அறியத்தருபவர்: எழிலரசு சுப்பிரமணியன்.