LOADING

Type to search

மலேசிய அரசியல்

மலேசியாவில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா நோய்த் தொற்று

Share

லேசியாவில் புதிதாக 17,170 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதுவே, இதுவரை பதிவாகியுள்ள 2ஆவது மிக அதிக தினசரி எண்ணிக்கையாக உள்ளது. இவ்வாறான நிலையில் மலேசியாவில் வைரஸ் தொற்றால் மேலும் 174 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 90 பேர் கிள்ளான் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவர்கள் என எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.

மேலும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுக் கவலைக்கிடமான நிலையில் இருப்போரின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டதாக, அந்நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
கடந்த ஏழு நாட்கள் அடிப்படையில் மலேசியாவில் ஒரு மில்லியன் பேரில் சராசரியாக 483.70 பேருக்கு நோய்த் தொற்று பதிவாகி வருகிறது. இது ஆசியாவில் அதிக எண்ணிக்கை என்பதோடு சர்வதேச அளவில் எட்டாவது இடத்தில் உள்ளது. புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.

இந்நிலையில், சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள செர்டங் மருத்துவமனை, முழு நேர கொவிட்-19 மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளதாக, மலேசியச் சுகாதார அமைச்சு தெரிவித்தது. சிலாங்கூர் மாநிலத்தில் மட்டும் அதுபோன்ற 4 மருத்துவமனைகள் வைரஸ் தொற்றுக்கான சிறப்பு மருத்துவச் சேவைகளை வழங்குகின்றன