பெண்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள்
Share
அனைத்து வேலைகளையும் ஒரே நாளில் செய்து முடிக்க வேண்டும் என்று கஷ்டப்பட வேண்டாம் பொறுமையாக வேலைகளை செய்யவும்.
இளைப்பாறுவதற்கு போதிய நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுங்கள், இதனால் உங்கள் உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்
சிறந்த உறக்கத்தை கடை பிடியுங்கள். எப்பொழுதும் புத்துணர்ச்சியாக உணருவீர்கள்
யோகா, மூச்சு பயிற்சி என்பவற்றை மேற்கொள்ளவும் இது சிறந்த உடல் நலனை பேண உதவும்
கண்ணாடி முன் நின்று உங்களை நீங்களே பார்த்து ஒரு அழகான புன்னகை புரியுங்கள் இது உங்களை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும்
கடைக்கு சென்று உங்களுக்கென பிடித்த சிறு சிறு பொருட்களை வாங்கி வாருங்கள் இது உங்களிடமுள்ள ஒரு குழந்தை தனமான ஆசைகளை நிறைவேற்றும், மன மகிழ்ச்சியையும் தரும்
உடல் நிலை குறைப்பாடாக இருந்தால் அது தானாகவே சரியாகி விடும் என வீட்டிலேயே இருக்காமல் சிறந்த மருத்துவரின் உதவியை நாடுங்கள்
தினமும் உங்கள் அழகை பராமரிப்பதற்கென ஒரு நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள் இது உங்களை நீங்களே விரும்புவதற்கு காரணமாக இருக்கும்
சமூகத்தில் நடைபெறும் விடயங்களை செய்தி நிகழ்ச்சி, பத்திரிகை போன்றவற்றின் மூலம் அறிந்துக் கொள்ளுங்கள், எம்மை பொது அறிவுடன் வைத்திருக்க உதவுவதாக அமையும்
வீட்டு விடயம் மட்டுமல்லாமல் வேறு விடயங்களில் உங்களுக்கென தனி திறமைகள் இருந்தால் அதை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள் உங்களின் தன்னம்பிக்கையை இது அதிகரிக்கும்.
ஒரு பெண்ணாக எப்பொழுதும் குடும்பத்தை பற்றி நீங்கள் சிந்திப்பது எவ்வளவு சிறந்ததோ அதே அளவு உங்களுக்கென சிறுது நேரம் ஒதுக்கி உங்கள் நலனை கவனத்தில் கொள்வதும் சிறந்தது.
– இரா. சஹானா