“முள்ளிவாய்க்கால் மனிதப் படுகொலைகளுக்கு முன்னும் பின்னுமாக அந்த மண்ணை தரிசித்தவன் என்றவகையில் எனது பிறப்பின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு பூரிப்படைகின்றேன்”
Share
தலைவர் பிரபாகரனால் நன்கு நேசிக்கப்பெற்ற தமிழகத்தின் தலை சிறந்த ஓவியர் புகழேந்தியின் உணர்வுமிகு உரையில் அவர் தெரிவிப்பு
” ஈழப்பபோர் மிகவும் தீவிரமாக இடம்பெற்ற காலத்தில் நான் வன்னி மண்ணை நேரடியாக தரிசிக்குமு; பாக்கியம் பெற்றவன். தலைவர் அவர்களை சந்திந்து அவரோடு பல நாட்களை பயனுள்ள வகையில் கழித்தவன் என்ற வகையில் அவருடைய தலைமைத்துவத்தில் நடந்தேறிக்கொண்டிருந்த ஈழப்போரின் நோக்கத்தைப் புரிந்து கொண்டவன். அவரது போராளிகள் அணியிலிருந்த மண் மீ;தும் இனத்தின் மீதும் மொழியின் மீதும் கொண்டிருந்த ஆழமான பற்றைப் புரிந்து கொண்டவன் நான் இவ்வாறான 2006ம் ஆண்டிலும் பின்னர் 2018 இலும் இலங்கையின் தமிழர் தாயகப் பிரதேசங்களில் பயணித்தும் தங்கியிருந்தும் அந்த மண்ணின் மைந்தர்களையும் அன்னையர்களையும் விடுதலைத் தாகம் கொண்ட மக்கைளயும் சந்தித்து உரையாடிய அனுபவத்தை எனது வாழ்வின் முக்கியமான அத்தியாயம ஒன்று என்று நான் பதிவு செய்ய விரும்புகின்றேன். இவ்வாறாக முள்ளிவாய்க்கால் மனிதப் படுகொலைகளுக்கு முன்னும் பின்னுமாக அந்த மண்ணை தரிசித்தவன் என்றவகையில் எனது பிறப்பின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு பூரிப்படைகின்றேன்'”
இவ்வாறு தலைவர் பிரபாகரனால் நன்கு நேசிக்கப்பெற்ற தமிழகத்தின் தலை சிறந்த ஓவியர் புகழேந்தி அவர்கள் நேற்று முன்தினம் சனிக்கிழமையன்று மாலை கனடா மார்க்கம் நகரில் நடைபெற்ற அவரது ‘நான் கண்ட தமழீழம்- முள்ளிவாய்க்காலுக்கு முன்பும் பின்பும்’ என்னும் நூல் அறிமுகவிழாவில் இணைய வழி ஊடாக பதிலுரை வழங்கிய போது தெரிவித்தார்.
கனடாவில் கணக்காளராகப் பணி;யாற்றும் தமிழ் இன உணர்வாளரும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்களில் ஒருவருமான திரு நிமால் விநாயகமூர்த்திியின் ஏற்பாட்டில் நடைபெற்ற மேற்படி நூல் அறிமுகவிற்கு திருமதி செல்வநாயகி ஶ்ரீதாஸ்; தலைமை தாங்கினார்.
பேராசிரியர் அ. சந்திரகாந்தன், திரு எஸ். திருச்செல்வம் மற்றும் திரு வல்லிபுரம் சுகந்தன் ஆகியோர் மேற்படி நான் கண்ட தமழீழம்- முள்ளிவாய்க்காலுக்கு முன்பும் பின்பும்’ என்னும் நூல் தொடர்பான கருத்துரைகளை வழங்கினார்கள்.
அங்கு இணைய வழி ஊடாக உரைகளின் பின்னர் உணர்வுமிகு பதிலுரையில் ஓவியர் புகழேந்தி அவர்கள் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“ஈழத்தமிழ் மண்ணில் நான் 2009 க்குப் பின்னரும் முன்னரும் கண்ட காட்சிகள் சந்தித்த போராளிகள் இயக்கத்தின் தளபதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம் நான் பெற்ற தகவல்கள் மற்றும் அபர்கள் பகிர்ந்து கொண்ட விடயங்கள் அணைத்து ஈழப்போர் தொடர்பான சாட்சிகளும் அடையாளங்களும் ஆகும். எனவே இவ்வாறன சாட்சியங்கள் ஈழத் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு அடையாளங்களாகவும் சாட்சிகளாகவும் விளங்கக் கூடியன என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்
விழாவை ஏற்பாடு செய்த நிமால் விநாயகமூர்த்தி நன்றியுரையாற்றினார்