LOADING

Type to search

கதிரோட்டடம்

உறவுகளின் நினைவுகளோடு தங்களை வருத்திய வண்ணம் வருடங்கள் பலவாக அமைதிப் போராட்டம் நடத்தும் அன்னையரை கைது செய்வதா?

Share

கதிரோட்டம் 10-03-2023

இலங்கையில் தமிழர் பகுதிகளின் காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளின் பெயர்களையும் உறவு முறைகளையும் தினமும் தங்கள் வாய்களால் உச்சரித்த வண்ணம் அமைதிப் போராட்டம் நடத்திய அந்த அன்னையரின் மனத்திடத்தைப் கவனிக்கும் உலகத் தமிழர்கள் உற்சாகத்தோடு அவர்களுக்கு உதவிகள் புரிந்து வருகின்றார்கள்.

துங்கள் அன்பிற்குரியவர்கள் இருக்கின்றார்களா? அல்லது அவர்களை ‘இல்லாமல்’ செய்துவிட்டீர்களா? என்பதை உள்ளபடி அறிவித்து விடுங்கள் என்ற அந்த அன்னையரின் வேண்டுகோள்கள் காற்றலைக்கு வந்து காலங்கள் கடந்து தற்போது ஏழு வருடங்களை எட்டுவதாக அறிகின்ற போது எங்கள் இதயத்துடிப்பு வேகமாக அடித்துக் கொள்கின்றது.
தமிழ்த் தலைவர்கள். சிங்களத் தலைவர்கள். இஸ்லாமியத் தலைவர்கள். மதத் தலைவர்கள் என ஊர் தலைவர்கள் இத்தனை வருடங்களாக எத்தனையோ தடவைகள் அந்த தற்காலிக கூடாரத்திற்கு சென்று ‘அமைதிப் போராட்டம்’ நடத்தும் நடத்தும் அந்த அன்னையரை சந்தித்துயம் உரையாடியும் வந்துள்ளார்கள்.

வெளிநாடுகளிலிருந்தும் கறுப்பு உடையணிந்த வெள்ளைக்காரர்கள் எத்தனையோ பேர் இதுவரையில் அந்த தற்காலிகக் கூடாரத்திற்குள் வந்து போய் விட்டார்கள். ஆனால் அங்கு அமர்ந்திருந்து போராடும் அன்னையர்களும். அவர்களுக்கு ஆதரவுக்குரல் கொடுத்து வரும் ஆண் தோழர்களும் எவ்விதமான நம்பிக்கை தரும் செய்திகள் எதுவும் கிட்டாத வகையில் தொடர்ச்சியான முறையில் போராத்தைத் தொடர்ந்து வருகின்றார்கள்.

இவ்வாறான நிலையில், நாம் குறிப்பிட்ட இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அன்னையர்களின் தலைவியாக விளங்கிவரும் பெண்மணி ஒருவர் அரசின் ஏவல்நாய்களால் வவுனியாவில் அவர்கள் போராட்டம் நடத்தும் தற்காலிக கொட்டகையின் முன்பாக வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி உலகெங்கும் பரவிய நிலையில் மிகவும் அமைதியான முறையில் தன்னைக் கைது செய்ய வந்திருந்த காவல்துறை அதிகாரிகளோடு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி மிகவும் அமைதியாக நடந்து செல்கின்றார் என்ற செய்தியும் படங்களும் எங்கள் கண்களின் முன்பாக வந்து சென்றுள்ளன.

ஆமாம் நண்பர்களே! எமது தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா வவுனியா பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை 9ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். வருடக்கணக்காக வீதியின் ஓரத்தில் நின்றவண்ணம் தங்கள் உறவுகளின் வரவு நிச்சயமாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகொளை முன்வைத்து ‘அமைதிப் போராட்டத்தை’ நடத்தும் அவர்களுக்கு தமிழர் தரப்புக்கள் பெரியளவில் கைகொடுக்கவில்லை என்றே அறியப்படுகின்றது

இந்த தலைவியை கைது செய்ததற்கு காவல்துறை காட்டிய காரணங்கள் நகைப்பிற்கு இடமாகத் தெரிகின்றபடியால் இந்த அற்பத்தனமான செயலைச் செய்யும் வண்ணம் ஏவப்பட்டுள்ள காவல் துறையினரை திட்டுவதா அல்லாது அரசாங்கத்தினை திட்டுவதா என்பது தெரியாமல் அந்த அமைப்பினர் தடுமாறுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உண்மை நிலையை வலியுறுத்துமாறு கோரி அவர்கள் போராட்டம் மேற்கொண்டு வரும் கொட்டகைக்கு சட்டவிரோதமாக மின்சாரத்தினை பெற்றனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குறித்த சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார அவர்கள் தாங்கள் கடந்த 2210 நாட்களாக குறித்த கொட்டகையிலேயே போராடி வருகிறோம் என்றும் அவர்கள் போராட்டம் நடத்தும் அந்த கொட்டகை பகுதியில் இருந்த மின்சார தூணில் இருந்து வீதி மின்விளக்கு ஒன்று பொருத்தப்பட்டிருந்ததாகவும் அதிலிருந்து தமக்கான மின்சாரம் இலங்கை மின்சார சபையால் வழங்கப்பட்டிருந்தது எனவும் தான் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையின் பிரதிகள் வெளிநாட்டில் உள்ள ஊடக நிறுவனங்களுக்கும் வந்து சேர்ந்துள்ளன என்பது இங்கு குறிப்பிட வேண்டியதொன்றாகும்
அதில் பழுதுகள் ஏற்பட்டபோதும் கூட இலங்கை மின்சார சபையினை சேர்ந்தவர்கள் வருகை தந்து அதனை சீரமைத்தும் தந்திருந்தனர். இந்நிலையில் தற்போது சங்கத்தின் தலைவியை ஒரு பெண் என்றும் பாராமல் திடீரென கைது செய்துள்ளமையை அறத்தை விரும்பும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. என்றும் தெரிவித்துள்ளார் அவர்.

ஆந்தக் கொட்டகையின் உள்ப் பகுதி மற்றும் அதன் முற்றம் ஆகிய பகுதிகளுக்கு வடக்கு கிழக்கு ஆகிய பகுதிகளிலிருந்து மக்கள் சென்று வருகின்றதாக எமது செய்தியாளர்கள் அறிவித்துள்ளார்கள். தங்கள் போராட்டத்தை திசை திருப்புவதற்காக வே இவ்வாறான சட்டங்கள் பிரயோகிக்கப்படுகின்றது என்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் எமது செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதை நாம் எமது வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம் என்றெல்லாம் ‘காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அன்னையர்கள் அன்றாடம் அழுதும் அமைதியாகப் போராட்டம் நடத்துகின்றார்கள்.

ஆனால் இந்த ஏழச்சியிலும் பார்க்க அரசியல் இலாபம் தேட முயலும் குள்ள நரிகள் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராக விட்டன என்ற செய்தியும் நேற்று மதியமமே எமது காதுகளை நோக்கி வந்தன. நாமும் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய நேரம் இதுவாகும்சூ