LOADING

Type to search

கனடா அரசியல்

கனடியப் பாராளுமன்றத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள்

Share

இலங்கை அரசினாலும் அதன் இராணுவத்தினாலும் மேற்கொள்ளப்படும் தமிழின அழிப்பு உலகறிந்தது. வருடத்திலும். வைகாசி 18 (May 18) அன்று தமிழின அழிப்பு நினைவு நாள் நிகழ்வில் நீதிக்காக உறுதி கொள்வதும் தமிழின அழிப்பில் இழந்தோரை நினைவு கூறுவதும் வழக்கம். கனடாவில் கடந்த 2022 வருடம் தமிழின அழிப்பு நினைவு நாள் மற்றும் இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பெற்ற கொடுமைகள் ஆகியவை தமிழின அழிப்பு என கனடிய பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது. மேலும் ஒன்டாரியோவில் தமிழின அழிப்பு கல்வி வாரம் 2021 முதல் சட்டமாகவும் உள்ளது

இந்த வகையில் கடந்த. மே 18, 2023 அன்று ஒட்டாவா தமிழ் ஒன்றியத்தினால் பாராளுமன்ற செய்தி அரங்கில் கனடா தமிழ் அமைப்புகள் சார்பாக அறிக்கை ஒன்று வழங்கப்பட்டது. அன்று இரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கெடுத்த பல ஒட்டாவா தமிழ் அமைப்புகள் இணைந்த தமிழின அழிப்பு நினைவு நாள் நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்த வருடம் 2023 இல் கனடிய பிரதமர் தனது அரசின் முதல் தமிழின அழிப்பு நினைவு நாள் அறிக்கையை வெளியிட்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Video of the Press Conference at Parliament Press gallery On Tamil Genocide Remembrance Day 2023: https://www.youtube.com/watch?v=aA1ysRNGUz0