Eric Walsh, the Canadian High Commissioner to Sri Lanka, surprised us by reading Tamil Words
Share
தமிழ்ச் சொற்களை வாசித்து மகிழ்ந்து. சந்தித்த அன்பர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் Eric Walsh,
நேற்று 30-05-2023 செவ்வாய்க்கிழமையன்று மதியம் ரொறன்ரோ மாநகரில் கனடா வாழ் அன்பர்கள் சிலரை நட்பின் நிமித்தம் சந்தித்து உரையாடி உணவருந்திச் சென்ற இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் Eric Walsh அவர்கள் மிகவும் நேசிப்புடனும் பொறுப்புணர்வுடனும் உரையாடினார்.
மேற்படி சந்திப்பில் ‘விழித்தெழு பெண்ணே’ அமைப்பின் இணை நிறுவனர்கள் நரோந்திரா-சசிகலா தம்பதி. வர்த்தகப் பிரமுகர் சங்கர் நல்லதம்பி- ஷகி தம்பதி, உதயன் பிரதம ஆசிரியர் லோகன்- பத்மா தம்பதி மற்றும் காப்புறுதி ஆலோசகர் லிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேற்படி சந்திப்பும் மதிய போசன விருந்தும் ரொறன்ரோ மாநகரத்தின் மத்தியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்றது.
அங்கு மிகுந்த நட்புடன் உரையாடி மகிழ்ந்த இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் Eric Walsh, அவர்கள் இலங்கையில் தான் பதவிக்கு வந்த மிகக் குறைந்த காலத்தில். வடக்கு கிழக்கு ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்கள் ஆகியவற்றும் பல தடவைகள் சென்று மக்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளையும் தேவைகளையும் அறிந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
ஒரு சந்தர்ப்பத்தில். கனடா உதயன் பத்திரிகையின் பிரதியொன்றை பிரதம ஆசிரியர் அவரிடம் வழங்கிய பொழுது ‘உதயன்’ என்ற சொல்லை அழகிய முறையில் உச்சரித்து மகிழ்ந்து அன்பர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
அத்துடன் மேலும் சில சொற்களையும் வாசித்து இலங்கையில் பல கிராமங்களுக்கும் பயணம் செய்யும் போது விளம்பர அறிவித்தல்கள் மற்றும் வீதிகளில் காணப்படும் கிராமங்கள் மற்றும் நகரங்களின் பெயர்களை படித்து படித்து தமிழ் எழுத்துக்களை வாசிக்கும் அறிவை தாம் தேடிக் கொண்டதாகவும் தெரிவித்தார்
செய்தியும் படங்களும்; சத்தியன் -31-05-2023