LOADING

Type to search

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய ஜெர்ஸி அறிமுகம்

Share

இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய ஜெர்ஸி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டிருக்கும் புதிய வீடியோ ஒன்று ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது. இந்திய கிரிக்கெட் அணிக்கு கில்லர் நிறுவனம் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் செய்து வந்த நிலையில், தற்போது அந்த ஒப்பந்தத்தை பிரபல நிறுவனமான அடிடாஸ் பெற்றுள்ளது. அந்த வகையில், தற்போது நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தொடரில் இருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பை அடிடாஸ் நிறுவனம் வழங்க உள்ளது.

இதற்காக ரூ. 350 கோடிக்கு அடிடாஸ் நிறுவனம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இந்திய அணிக்கான புதிய ஜெர்சி இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. டெஸ்ட் போட்டி, ஒருநாள் மற்றும் டி20 போட்டி என 3 விதமான ஜெர்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதேபோன்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கும் புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Fantastic promo for Indian team new Jersey by Adidas. pic.twitter.com/84xTUdVDFZ

— Johns. (@CricCrazyJohns) June 3, 2023

இவை அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை பெற்றிருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். வரும் 7-ஆம்தேதி தொடங்க உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி, புதிய ஜெர்சியுடன் களத்தில் இறங்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. 7ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டி 11ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. அதற்கு முன்னரே முடிவடைவதற்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணி ஐசிசி கோப்பை எதுவும் கைப்பற்றாத நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.