மொன்றியால் மாநகரில் “கைதி இல 1056” நூல் அறிமுக விழா
Share
Prisoner 1056 ஆங்கில நூல் அறிமுகம் எதிர்வரும் ஜூன்11ம் நாள் ஞாயிறு மாலை 3 மணி (11.06.2023) அளவில் மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கல்யாண மண்டபத்தில் நடை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.
தனது 17வது வயதில் தமிழர்களில் ஒருவராக இலங்கை அரசின் காவல்துறையினரால் தேச விரோத தமிழர்களுள் ஒருவரென சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு சித்திரைவதைகளுக்குள்ளாகிப் பின் அவரது தந்தையின்பகீரத முயற்சியினால் விடுதலையாகி 50 டொலர்களுடன் கனடிய மண்ணில் காலடி வைத்து இன்று சுதந்திரக் கனடியக் குடிமகனாகவும், கனடாவின் மிகப்பெரிய நிறுவனமான CANADA’S LARGEST INDEPENDENT ASSET MANAGEMENT COMPANY யின் உயர் அதிகாரியாகப் பணியாற்றுபவருமான Roy Rathinavel அவர்களின் சிறை அனுவங்களும் – சுதந்திரத்திற்கான தேடல்களும் என்ற நூல் அறிமுகமாகவுள்ளது. கனடிய முன்னாள் பிரதமர் கௌரவ பிறைன் மல்றோனி உட்பட பல தலைவர்களிலும் கல்வியாளர்கள் – பிரமுகர்களாலும் விமர்சிக்கப்பட்டும் பாராட்டும் பெற்ற இந்நூல் ஆசிரியரை கனடிய CTV தொலைகாட்சி நேர்காணல் செய்தமை நாம் பெருமைபடக் கூடிய விடயமாகும்.
இந்நூல் PENGUIN RANDOM HOUSE, VIKING பதிப்பதத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
நூல் அறிமுக விழா ஒருங்கிணைப்பாளர்களாக திருவாளர் வாகிசன் நடராஜா. பாலசிங்கம் கருணானந்தன். வீணைமைந்தன் ஆகியோர் இணைந்து செயற்படுகின்றனர். அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு: (514) 924-3436 – (514) 684-3604