மன்னார் நகர பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்
Share

(12-07-2023)
இவ்வருடத்திற்கான இரண்டாவது பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரதீப் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் இன்று (12) இடம் பெற்றது .
குறித்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பின்வரும் முக்கிய விடயங்கள் தீர்வுக்காக முன்வைக்கப்பட்டன.
இறால் பண்ணைகள் அமைய பெறுவதனால் ஏற்படுகின்ற சாதக பாதகம்,கடல் அட்டைகளுக்கான அனுமதி பத்திரம் வழங்குவது சம்பந்தமாகவும்,காற்றலை மூலமாக மின் உற்பத்தி சம்பந்தமாகவும்,குறித்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
இன் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மற்றும் திணைக்களத் தலைவர்கள்,பாதுகாப்பு உயர் அதிகாரிகள்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.