ஐந்து மாதங்களின் பின் யாழ்ப்பாணம் வந்த வெள்ளோட்ட புகையிரதம்!
Share

சுமார் ஐந்து மாதங்களின் பின் யாழ்ப்பாணத்துக்கான புகையிரத வெள்ளோட்ட நிகழ்வு போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துள்ள குணவர்த்தன தலைமையில் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் வந்தடைந்தது.
அநுராதபுரத்தில் இருந்து ஓமந்தை வரையிலான நவீனமயமாக்கப்பட்ட வடக்கு ரயில் பாதைக்காக இந்திய அரசாங்கம் இலங்கை ரூபாய் 3ஆயிரம் கோடிகளை வழங்கி நிலையில் இன்றயதினம் புகையிரத வெள்ளோட்ட நிகழ்வு இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் ஜெபாஸ்கர் , பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் பிரத்தியேகச் செயலாளர் குலேந்திரன் சிவராம், யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிறி மோகன், மற்றும் வட பிராந்திய இலங்கை போக்குவரத்து சபையின் பிரதான முகாமையாளர் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.