LOADING

Type to search

இலங்கை அரசியல்

முறைகேடான நிதி சேகரிப்பை மூடி மறைக்கும் முல்லைத்தீவு வலய கல்விப் பணிப்பாளர் – தகவல் அறியும் சட்ட மூலத்தில் முரண்பாடான பதில்

Share

பு.கஜிந்தன்

முறைகேடான நிதி சேகரிப்பை மூடி மறைக்கும் வலய கல்விப் பணிப்பாளர் – தகவல் அறியும் சட்ட மூலத்தில் முரண்பாடான பதில்

முல்லைத்தீவு வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் அதிபரின் மணிவிழாவினைக் கொண்டாடுவதற்காக சில ஆசிரியர்கள் தமது சொந்த வங்கிக் கணக்கில் சுமார் 4 இலட்சம் ரூபா வரை நிதி சேகரித்து செலவு செய்தமை ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் முல்லைதீதீவு வலயக்கல்வி பணிப்பாளருக்கு அனுப்பப்பட்ட தகவல் அறியும் சட்டமூலத்தில் குறித்த மணிவிழாவுக்கான மணிவிழா குழு நியமிக்கப்படவில்லை எனவும் ஆசிரியர்களால் இணைந்து அதை செய்ததாகவும் தகவல் வழங்கப்பட்டது.

இது தொடர்பாக முல்லைத்தீவு வலய கல்வி பணிப்பாளரின் மீது பின்வரும் குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டுள்ளன.

தகவல் அறியும் சட்டமூலம் (NP/MU/ Zonal/RTI/Appeal/06) கேட்கப்பட்ட கேள்விக்கு, மணிவிழா குழு என்பது கூடப்படவில்லை எனவும் ஆசிரியர்கள் தாமாகவே மணிவிழாவை முன்வந்து கொண்டாடியதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் பத்திரிகை விளம்பரங்களிலும் செய்திகளிலும் மணி விழா அழைப்பிதழிலும் மணிவிழா குழு தலைவர் எனப் பெயர் குறிப்பிடப்பட்டது.

தகவல் அறியும் சட்டமூலம் (Np/Mu/Zonal/RTI/16) மணிவிழா குழு கூடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

தகவல் அறியும் சட்டம் NP/MU/ Zonal/RTI/Appeal/06 வங்கி கணக்கின் ஊடாக நிதி சேகரிக்கப்படவில்லை என தகவல் அறியும் சட்ட மூலத்தை க்குப் பதில் வழங்கினார் வலயக்கல்வி பணிப்பாளர்.

கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின் படி ஆசிரியர்கள் நேரடியாகவோ தமது சொந்த வங்கி கணக்கின் ஊடாகவோ நிதி சேகரிக்க முடியாது.

இவ்வாசிரியர்கள் நேரடியாகவும் மற்றும் தமது தனிப்பட்ட வங்கி கணக்கின் ஊடாகவும் நிதி சேகரித்துள்ளமைக்கு வலயக் கல்வி பணிப்பாளரால் எவ் விதமான விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை

குறித்த பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் கடந்த 14.11.2022 அன்று மணிவிழா தொடர்பான தெளிவு கோருதல் என்று எழுதிய கடிதத்திற்கு இன்று வரை பாடசாலையால் பதில் வழங்கப்படாத போதிலும் முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளரால் பதில் வழங்கப்பட வில்லை .

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் Np/Mu/Zonal/RTI/16 கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலுக்கு பழைய மாணவர் சங்க செயலாளர் (முன்னைய) தமது தகவல் கடிதத்திற்கு ஏன் பதில் வழங்கப்படவில்லை என வலயக் கல்வி அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

மேலும் மணிவிழா முடிந்த பின்னர் மணிவிழா தொடர்பான தெளிவு கோரலை பழைய மாணவர்கள் கேட்டதை இட்டு பழைய மாணவர்களின் நிதியை திருப்பி தருவதாக ஆசிரியர் சங்க தலைவர் செயலாளர் பொருளாளர் ஆகியோர் கடிதம் ஒன்றை வரைந்திருந்தனர் .

மணிவிழாவின் பின்னரும் 50 ஆயிரம் ரூபாய் நிதி ஆசிரியர் சங்கத்திடம் எவ்வாறு வந்தது

இவ்வாறான முறைகேட்டை செய்த ஆசிரியர்களுக்கு எதிராக முல்லைத்தீவு வலயக்கல்வி பணிப்பாளர் தகுந்த நடவடிக்கை எடுக்காமை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

ஆகவே வடமாகாண பாடசாலைகளில் பல்வேறு நிர்வாக முறைகள் தொடர்ச்சியாக இடம் பெற்று வரும் நிலையில் விசாரணை குழு அமைப்பதும் அதன் பின்னர் நடவடிக்கைகள் இன்று கிடப்பில் கிடப்பதும் தொடர்கதையாகவே உள்ளது.