LOADING

Type to search

கதிரோட்டடம்

தர்மத்தின் எல்லை தாண்டி உதவிக்கரம் நீட்டும் மன்னார் மெசிடோ நிறுவனத்தின் மகத்தான பணிகள்

Share

கதிரோட்டம் 22-03-2024 வெள்ளிக்கிழமை

‘பாத்திரம் அறிந்து பிச்சை போடு’; என்ற கூற்று எம்மவர்கள் மத்தியில் எத்தனையோ ஆண்டுகளாய் பகிரப்படும் ஒன்றாக இருந்தும் உண்மையில் உணர்வோடு உதவிகளைச் செய்பவர்கள் ‘அளந்தோ’ அன்றி ‘அறிந்தோ’ உதவிகள் வழங்கமாட்டார்கள். அதுவும் உதவிக்கரம் நீட்டுபவர்கள் சிலர் மதங்களின் அடிப்படையில் உதவிகளை வழங்குவார்கள் அல்லது தெரிந்தவர்களுக்கு மட்டுமே உதவிகளைச் செய்வார்கள்.

ஆனால் எமது ஆசிரிய பீடத்திற்கு வந்து சேரும் சாதாரண செய்திகளுக்கு மத்தியில் ‘சாதாரணமானது’ என்று நாம் புறக்கணித்து விடமுடியாத ஒரு செய்தி ஒன்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து. நாம் இவ்வார ஆசிரிய தலையங்கமான ‘கதிரோட்டத்தை’ வடிக்கின்றோம்.
‘மன்னார் மெசிடோ நிறுவனம்’ என்ற உதவிகள் வழங்கும் அமைப்பு தொடர்பான செய்திகளை எமது மன்னார் செய்தியாளர் லம்பேர்ட் அவர்கள் தவறாது அனுப்பி வைப்பார். அந்த நிறுவனத்தின் உதவிக் கரம் நீட்டும் திட்டங்கள் மன்னார் பிரதேசத்தில் ‘அடிக்கடி’ இடம்பெறும் என்பதை அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் மூலம் அறிந்து அவ்வாறான செய்திகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. இந்த அமைப்பு யாழ்ப்பாண நகரத்திலும் பலருக்கு தனது உதவிக்கரத்தை நீட்டியிருந்த வைபவங்கள் பல இதற்கு முன்னர் இடம்பெற்றிருந்தன.
ஆனால் இவ்வாரக் கதிரோட்டத்தில் இடம்பெறும் அளவிற்கு அந்த அமைப்பினர் செய்த உதவிகள் வழங்கும் நிகழ்வானது ‘ தர்மத்தின் எல்லைகளைக் கடந்து சென்றுள்ளது என்ற உயரிய கௌரவத்தை அந்த ‘மன்னார் மெசிடோ நிறுவன’ த்தின் நிர்வாகிகளுக்கு ஈட்டிக்கொடுத்துள்ளது என்றால் அது மிகையாகாது.

நூம் ஏற்கெனவே அறிந்த விடயம் ஒன்றே மன்னார் மெசிடோ நிறுவனத்தை மிகவும் அவசியமானவர்களுக்கு தமது உதவிக்கரத்தை நீட்டுவதற்கு தூண்டியுள்ளது. மியன்பார் எனப்படும் முன்னைய ‘பர்மா’ தேசத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்களை அந்த நாட்டின் பெரும்பான்மை ஆளும் இனத்தினர் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர். ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் அரசின் ஆதரவோடு (நாம் பிறந்த இலங்கையில் நடைபெற்றது போன்ற ஒன்றே இது எனலாம்)😉 இந்த தாக்குதல்கள் காரணமாக மியன்மாரில் இருந்து இடம் பெயர்ந்து பல நாடுகளுக்கும் தப்பி ஓடுவதற்கு அங்கு வாழ்ந்து வந்த இஸ்லாமியர்கள் முயன்றார்கள். இந்தியா போன்ற நாடுகள் அவர்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கவில்லை.

இனம் சார்ந்த தாக்குதல்கள் காரணமாக மியன்மாரில் இருந்து இடம் பெயர்ந்து பங்களாதேஸ் நாட்டில் தற்காலிகமாக வாழ்ந்த நிலையில் அங்கிருந்து வெளியேறி தமது உயிரை பாதுகாத்துக் கொள்ள கடல் வழியாக பயணித்த போது கடல் மார்க்கமாக பயணித்த மியன்மார் முஸ்லிம் அகதிகள் 105 பேர் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையில் அகதிகளாக தஞ்சமடைந்தனர். ஆனால் அவ்வாறு வந்த ஒரு குழுவினரை பௌத்தர்கள் சென்று தாக்க முயன்றதை நாம் செய்திகள் வாயிலாக அறிந்தோம்.

யாழ்ப்பாணம் வலி வடக்கு பகுதியை வந்தடைந்த நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய குறித்த மியன்மார் அகதிகள் கொழும்பு பாணந்துறையில் தங்க வைக்கப்பட்டனர்.

இவ்வாறாக அவர்கள் அகதிகளாக இலங்கைக்கு வந்து பாணந்துறையில் தங்கியுள்ள மியன்மார் முஸ்லிம் மக்களுக்கு அவசரமாக காணப்பட்டு வீட்டிற்கான நிவாரணத்தை மன்னார் மெசிடோ நிறுவனம் நேற்றைய தினம் 28ம் திகதி வியாழக்கிழமை நேரடியாக சென்று வழங்கி வைத்துள்ளனர்.

இவ்வாறு ‘மன்னார் மெசிடோ நிறுவனம்’ வழங்கிய பண உதவிகள் அந்த மியன்மார் அகதிகளுக்கு அவர்கள் தங்கியுள்ள வீட்டு வாடகைக் கட்டணங்களை செலுத்த உதவியுள்ளதை நாம் கவனிக்க வேண்டும்.

மன்னாரில் இயங்கிவரும் இந்த மெசிடோ நிறுவனம் இந்த உதவி வழங்கும் திட்டத்தின் வாயிலாக ‘தர்மத்தின் எல்லைகளைத் தாண்டி புரிந்த மாபெரும் உதவி என்றே நாம் கருதுகின்றோம். அதற்காகவே பாராட்டுகின்றோம்