LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கையில் தொடரும் நெருக்கடிகள்- தொடர்ச்சியாக வெளியேறும் மக்கள்’

Share

நடராசா லோகதயாளன்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து இன, மத பேதமின்றி வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களது எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

2024 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் மட்டும் 74 ஆயிரத்து 499 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 34 ஆயிரத்து 599 பேர் பெண்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு சென்ற ஆண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 900 எனவும், பெரும்பாலான இலங்கையர்கள் குவைத் நாட்டிற்கு தொழிலுக்காகச் சென்றுள்ளனர் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த புள்ளிவிபரங்களின்படி, இலங்கையர்கள் கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், தென் கொரியா, இஸ்ரேல் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் தொழில் தேடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

இதன்படி, 2024 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் மாத்திரம் தென் கொரியாவிற்கு 2,374 பேரும், இஸ்ரேலுக்கு 2,114 பேரும், ருமேனியாவிற்கு 1,899 பேரும் ஜப்பானுக்கு 1,947 பேரும் சென்றுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.