LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னார் புதுக்குடியிருப்பு முகைதீன் ஜும்மா பள்ளியில் மதங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இப்தார் நிகழ்வு

Share

(மன்னார் நிருபர்)

(04-04-2024)

இலங்கையின் வட மாகாணத்தில் ஏனைய மாவட்டங்களை விட மன்னார் மாவட்டத்திற்கு என ஒரு சிறப்பு காணப்படுகின்றது.பல் மதங்கள் ஒற்றுமையுடன் வாழ்கின்ற ஒரு மாவட்டமாக மன்னார் மாவட்டம் திகழ்கிறது என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் தெரிவித்தார்.

மன்னார் புதுக்குடியிருப்பு முகைதீன் ஜும்மா பள்ளியில் நேற்றைய தினம் புதன்கிழமை (3) மாலை நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு புதுக்குடியிருப்பு முகைதீன் ஜும்ஆ பள்ளி நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.

மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இடம் பெற்ற குறித்த இப்தார் நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,

இலங்கை பல்லின மக்களையும்,பல மொழிகளை பேசுகின்றவர்களையும் கொண்டுள்ள ஓர் அழகிய நாடாக உள்ளது.இலங்கையின் வட மாகாணத்தில் ஏனைய மாவட்டங்களை விட மன்னார் மாவட்டத்திற்கு என ஒரு சிறப்பு காணப்படுகின்றது.

-பல் மதங்கள் ஒற்றுமையுடன் வாழ்கின்ற ஒரு மாவட்டமாக மன்னார் மாவட்டம் திகழ்கின்றது.

மன்னார் மாவட்டத்தில் சர்வ மதங்களை சேர்ந்தவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.ஒற்றுமையாக சமாதானத்துடன் இன ஐக்கியத்துடன் வாழ்ந்து வருகின்றார்கள்.

இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியல் அமைப்பில் கூறப்படுகிறது இலங்கையில் அனைத்து மக்களுக்கும் சமமான அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது.என்று.

ஒவ்வொருவரும் தாம் விரும்பிய மதத்தை பின்பற்றக்கூடிய மதச் சுதந்திரம் அரசியல் அமைப்பின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.என அவர் தெரிவித்தார்.

குறித்த நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வில் மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் ,அருட் தந்தையர்கள்,இஸ்லாமிய மத தலைவர்கள்,பொலிஸ் அதிகாரிகள்,அனைத்து கிராமங்களின் நிர்வாகிகள்,கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டு மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் குறித்த நிகழ்வில் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது.