LOADING

Type to search

இந்திய அரசியல்

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக திறக்கப்பட்ட நீர் ஆழ்வார்புரம் வைகை ஆற்று தடுப்பணைக்கு வந்தடைந்தது!

Share

மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் கள்ளழகர் எழுந்தருளும் பகுதியான ஆழ்வார்புரம் வைகை ஆற்று தடுப்பணை பகுதிக்கு வந்துடைந்துள்ளது.

     மதுரையின் மிக முக்கியமான அடையாளங்களுள் ஒன்று மீனாட்சி அம்மன் கோயில். மீனாட்சி அம்மன் கோயிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்று சித்திரை திருவிழா. மதுரை மட்டுமல்லாமல் தென் மாவட்ட மக்களின் மிக முக்கிய கொண்டாட்டங்களில் ஒன்று சித்திரை திருவிழா. இதில் முக்கிய நிகழ்ச்சிகளாக பார்க்கப்படும் மீனாட்சிக் திருக்கல்யாணமும், அழகரின் வைகை ஆற்று வைபவமும் மதுரை மக்களின் வாழ்வியலோடு கலந்துவிட்ட ஒன்று. ஒரு மாதம் முழுவதும் தயாராகி அதிக நாட்கள் கொண்டாடப்படும் ஒரே திருவிழா சித்திரை திருவிழா தான். இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினமும் மதுரை மாநகரில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இதனையடுத்து, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் காலையில் 8.51 மணியளவில் கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு ஏப்ரல் 23-ல் நடைபெறுகிறது. இதனையடுத்து, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக, வைகை அணையிலிருந்து வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில், கள்ளழகர் திருவிழாவிற்காக திறக்கப்பட்ட தண்ணீர் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் பகுதியான ஆழ்வார்புரம் வைகை ஆற்று தடுப்பணை பகுதிக்கு வந்துடைந்துள்ளது.