LOADING

Type to search

இந்திய அரசியல்

“அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்க துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது” – அரவிந்த் கெஜ்ரிவால் மனு!

Share

அமலாக்கத்துறை அளித்த பதிலுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

     மதுபான கொள்கை வழக்கில் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21 ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  கெஜ்ரிவால் தரப்பிலிருந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில்,  தேர்தல் நடைபெறும் சமயத்தில் அமலாக்கத் துறையினர் கைது செய்தது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என வழக்கு தொடரப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு  மீதான விசாரணை ஏப்.15 ஆம் தேதி நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா,  தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.‘தன்னை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதற்காகவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த நிலையில்,  அமலாக்கத்துறை அளித்த பதிலுக்கு டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “மத்திய அரசு அமலாக்க துறையை எந்த அளவிற்கு தனது அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக பயன்படுத்துகிறது என்பதற்கான மிகச் சரியான உதாரணம் இது.  தேர்தல் நேரத்தில் அரசியல் செயல்பாடுகள் உச்சத்தில் இருக்கும்போது அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம் அவர் சார்ந்த கட்சிக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தி அதன் மூலமாக தனது மேலாதிக்கத்தை காட்டுவதற்கு மத்திய அரசு முயற்சி செய்கிறது. அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முறை சமரசம் செய்யப்பட்டுள்ளது.  அமலாக்கத்துறை எந்த அளவிற்கு பழிவாங்கும் நடவடிக்கைக்காக தன்னிச்சையாக நடந்து கொள்கிறது என்பது தெளிவாக புரிகிறது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.