LOADING

Type to search

உலக அரசியல்

ஐக்கிய அமீரகத்தில் கனமழை- சர்வதேச விமான சேவைகள் ரத்து

Share

துபாயில் கடந்த மாதம் உருவாகிய புயல் காரணமாக வரலாறு காணாத பலத்த மழை பெய்தது. இதனால், துபாய் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். போக்குவரத்து ஸ்தம்பித்தது. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று இடியுடன் கூடிய பெய்த பலத்த மழை காரணமாக பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாட்டின் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம், நிலைமையைச் சமாளிக்க தயார் நிலையில் உள்ளது. துபாயில் பெய்த மழையைவிட இது குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், துபாயை தளமாகக் கொண்ட எமிரேட்ஸ் விமான நிறுவனம், துபாய் சர்வதேச விமான நிலையத்தில் சேவை குறைக்கப்பட்டதால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் மோசமான வானிலை காரணமாக பல விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்தது. “இன்று துபாய் விமான நிலையத்திலிருந்து வரும் அல்லது புறப்படும் வாடிக்கையாளர்கள் விமான சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் சில தாமதங்கள் ஏற்படலாம்” என அமீரகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.