வெள்ளம், நிலச்சரிவு – பிரேசிலில் 179 பேர் பலி
Share
பிரேசில் நாட்டில் கடந்த மே மாதம் முதல் பருவமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக அந்நாட்டின் தெற்கு மாகாணமான ரியோ கிராண்டி டு சுல் நகரில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக நகரின் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பிரேசிலில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 179 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 33 பேர் மாயமாகியுள்ளனர். மாயமானவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.